அநுராதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருளை விநியோகித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை கைது செய்துள்ளார்.
இந்த பெண் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் பெறுமதி ஒரு கோடி ரூபா எனவும் அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹுரிகஸ்வெவ பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பூஸ்ஸ சிறைச்சாலையின் உயர்பாதுகாப்புப் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இந்த பெண் தொடர்பிலிருந்துள்ளார் .
சந்தேகத்திற்குரிய பெண் கடற்படை சிப்பாய் ஒருவருடன் இணைந்து போதைப்பொருளை தம்புத்தேகம, மீகலாவ, ராஜாங்கனை, எப்பாவல, கெக்கிராவ ஆகிய இடங்களுக்கு விநியோகித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது

