தென்ஆபிரிக்காவில் இடிந்து விழுந்தது ஐந்து மாடிக்கட்டிடம் – 50க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள்

17 0

தென்ஆபிரிக்காவில் ஐந்து மாடிக்கட்டிடம் இடிந்துவிழுந்ததில் இருவர் பலியாகியுள்ள அதேவேளை சுமார் 55 பேர் கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர்.

வெஸ்டேர்ன் கேப் மாகாணத்தின்  ஜோர்ஜியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

22பேர் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிடம் இடிந்துவிழுந்தவேளை கட்டிடத்திற்குள் சுமார் 75 பேர் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்கப்பட்ட 22 பேரில் இருவர் பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன இடிபாடுகளை அகற்றுவதற்கான இயந்திரங்களை பயன்படுத்துகின்றோம் மோப்பநாய்களை பயன்படுத்துகின்றோம் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடம் முழுமையாக தரைமட்டமான நிலையில் காணப்படுவதையும் கட்டிடத்தின் கூரைஇடிபாடுகளிற்குள் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

நபர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருப்பதை பார்த்தேன் பாரிய சத்தம் கேட்டது முழுகட்டிடம் இடிந்துவிழுந்தது இதனைபார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.