ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ”மாகொல சுதா” உட்பட இருவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் .
சந்தேக நபர்களிடமிருந்து , 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் , சொகுசு கார் , 33 கிராம் 330 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , இலத்திரனியல் தராசு , , 5 கைத்தொலைபேசிகள் , பண பரிவர்த்தனை புத்தகம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களைக் கைது செய்ய முற்பட்டபோது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

