பலாங்கொடை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை (06) காலை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த இந்த மாணவி பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.
விகாரையில் மயங்கி விழுந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
உயிரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை பலாங்கொடை வைத்தியசாலையில் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

