அமைச்சராகும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்!

140 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் அடுத்த வாரம்  நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரே இவ்வாறு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். 

2000 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திவரும் இவர், இதற்கு முன்னர் பல அரசாங்கங்களில்  அமைச்சர் பதவிகளை வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு என்ன அமைச்சு  பதவி கிடைக்கும் என்பது இதுவரை வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.