உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை வழங்கும் திட்டத்தை முன்வைத்துள்ள எந்த கட்சிக்கும் வாக்களியுங்கள்!

18 0

கர்தினால் மல்கம் ரஞ்சித் தான் எந்தவொரு அரசியல்கட்சிக்கும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறிதது சமீபத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது கர்தினால் மல்கம் ரஞ்சித் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என தெரிவிக்கும் வகையில் செயற்படுகின்றார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்த நிலையில் கர்தினால் அதனை நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் அல்லது பொதுமக்களின் ஆதரவை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் நான் கருத்து தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித்  அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளை கண்டித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் இவ்வாறான அறிக்கைகள் மக்களை தவறாக வழிநடத்தலாம் என தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான ஆதாரமற்ற அறிக்கைகளை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் பாதுகாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை விமர்சிக்ககூடாது என தெரிவி;த்துள்ள மல்கம் ரஞ்சி;த் சில தனிநபர்களின் அறிக்கைகளால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்கட்சியான தேசிய மக்கள் சக்தியும் மாத்திரமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எவ்வாறு முன்னெடுக்கவேண்டும் என்ற தங்களின் யோசனைகளை சமர்ப்பித்துள்ளன,ஏனைய கட்சிகளுக்கும் தங்களின் யோசனைகளை சமர்ப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை ஒருபோதும் கேட்டுக்கொள்ளவில்லை எனினும் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறிய  உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்கவேண்டிய கடப்பாட்டினை நிறைவேற்ற தவறியவர்களிற்கு வாக்களிக்கவேண்டாம்; என்றே வேண்டுகோள் விடுத்துள்ளேன் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிப்படையான விசாரணைகளையே நான் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளேன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு நீதியை வழங்கும் திட்டத்தை முன்வைத்துள்ள எந்த கட்சிக்கும் வாக்களிக்குமாறு மக்களை நான் ஊக்குவிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.