வீதியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலிருந்து யாசகம் கேட்போருக்குப் பணம் கொடுக்க வேண்டாம் எனப் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வீதியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலிருந்து யாசகம் கேட்போருக்கு வாகனங்களில் உள்ள பயணிகள் பணம் கொடுப்பதைத் தவிர்த்தால் அவர்கள் அங்கு யாசகம் செய்வதைக் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

