இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகளை மேம்படுத்துவதற்காக இருநாடுகளின் விமானப் போக்குவரத்து அதிகாரசபைகளுக்கும் இடையிலான விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக 2015.05.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும், இதுவரை குறித்த விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இயலுமை கிட்டவில்லை. உத்தேச விமான சேவைகள் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் எந்தவொரு இடத்திலிருந்தும் கசகஸ்தானின் எஸ்டானா மற்றும்ஃஅல்லது அல்மெட் வரைக்கும் திட்டவட்டமான விமான வழிப்பயணத்தினூடாக வாரத்திற்கு 7 தடவைகள் விமான சேவைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, இருதரப்பினரும் உடன்பாடு எட்டப்பட்டுள்ள விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

