மட்டக்களப்பு வாகனேரியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

27 0

மட்டக்களப்பு வாகனேரி காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சடலம் இன்று திங்கட்கிழமை (29) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி வாகனேரி காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடம் ஒன்றே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.