17 வயதான சகோதரனின் கத்தரிக்கோல் தாக்குதலில் உயிரிழந்த 19 வயதுடைய சகோதரன்!

120 0

இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய சகோதரன்  கத்திரிக்கோலினால் தாக்கியதில் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், 17 வயதுடைய  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.