மஹரகமையில் 8 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது!

21 0

8 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் மஹரகமை – நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 8 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றின் மொத்த மதிப்பு 160 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.