இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம்: அரசாங்கத்தின் அறிவிப்பு

14 0

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைந்து விட்டதாகவும், பொருளாதாரத்தில் தற்போது வளர்ச்சி உருவாகி வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி 2022இல் 360 ரூபாவாக இருந்த நிலையில், இன்று அது 300 ரூபாயாக குறைவடைந்துள்ளமையை வளர்ச்சிக்கு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

அத்துடன், இலங்கையில் மாற்று விகிதங்கள் சந்தையில் நிர்ணயிக்கப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

இது, அந்நிய செலாவணி சந்தையில் வழங்கல் மற்றும் தேவை இயக்கவியலுக்கு ஏற்ப நாணய மதிப்புகளை மாற்றுகிறது என்றும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதால், குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வது மலிவாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது கொள்வனவு சக்தியை அதிகரிப்பதோடு பணவீக்க அழுத்தங்களைக் குறைக்கவும் நாட்டின் கடன் சுமையை கட்டுப்படுத்தவும் பங்களிக்கும் எனவும் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்