பெண்கள் கிரிக்கெட் குறித்து மஹேலவின் நிலைப்பாடு!

21 0

ஆண்களுக்கான பாடசாலை கிரிக்கெட் முறைமையை போன்று பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறையையை விரிவுபடுத்தப்படுவதற்கு சமமான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாலந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று (26) ஆரம்பமான நாலந்தா கல்லூரி 88 அணி தலைமையிலான மஹேல சங்க சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

“ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கான பாடசாலை விளையாட்டு முறையை விரிவுபடுத்த வேண்டும், ஏனென்றால் பெண் வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்…”

இதேவேளை, நேற்று முன்தினம் (25) அபுதாபியில் நடைபெற்ற மகளிர் 20-20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலக்கை துரத்திய தாய்லாந்து மகளிர் அணியால் 16.2 ஓவர்களில் 55 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.