சிறைச்சாலை காவலரை தாக்கிய சந்தேக நபர் கைது!

136 0

 மினுவாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறைச்சாலை காவலர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி கும்பல் அவரை துப்பாக்கியால் மிரட்டி தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன்படி, தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலவத்த பகுதியில் நேற்று (23) பிற்பகல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.