அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து பெரும் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
டப்பிளினில் பல வாகனங்களும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட சம்பவங்;களும் இடம்பெற்றுள்ளன.

பல இடங்களில் பொலிஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலிற்கு பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமே வன்முறையாக மாறியுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்;திக்குத்து தாக்குதலில் மூன்று பாடசாலைமாணவர்கள் உட்பட ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பார்னல் சதுக்கத்தில் உள்ள ஆரம்பபாடசாலைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


