சர்வதேச ஊடகங்களிற்கு உண்மைகளை வெளியிட்ட காசா மருத்துவமனையின் இயக்குநர் கைது

180 0
image

காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காசாவின் தென்பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த முகமட் அபு சல்மியா கைதுசெய்யப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

அல்ஷிபா மருத்துவமனை ஹமாசின் பிரதான தளமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மருத்துவரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணைக்குட்படுத்துகின்றது.

அவரது முகாமைத்துவத்தின் கீழ் மருத்துவமனையில் அதிகளவில் ஹமாசின் செயற்பாடுகள் காணப்பட்டன என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு விமானக்குண்டுவீச்சினை மேற்கொண்டவேளை மருத்துவனையில் காணப்பட்ட நிலைமை குறித்து மருத்துவர் சர்வதேச ஊடகங்களிற்கு பரவலாக தகவல்களை வெளியிட்டிருந்தார்.