அலெக்ஸ் மரணம் – பக்கசார்பற்ற விசாரணையை கோருகின்றார் சுவிஸ் தூதுவர்

138 0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் கவலை வெளியிட்டுள்ளார்.

பொலிஸாரின் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை இளைஞன் உயிரிழந்மை குறித்து ஆழ்ந்த கவலையடைகின்றேன் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகள் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.