மல்லாவி – பாண்டியன்குளம் இணைப்பு வீதியினை புனரமைப்பு செய்துதர கோரிக்கை

112 0

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிர்வுக்குற்பட்ட பாண்டியன்குளம் சிவன் கோவில் வீதியானது யுத்த காலத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கூட புனரமைத்து தரப்படவில்லை எனவும் குறித்த வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த பிரதேச மக்கள் மல்லாவி நகருக்கு செல்லும் பிரதான போக்குவரத்து பாதையாகவும் குறிப்பிட்ட வீதி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்

குறித்த வீதியானது எந்தவித புனரமைப்புக்களும் இன்றி பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதனால் இவ்வீதியூடாக மக்கள் போக்குவரத்துச் செய்யமுடியாது நிலையில் காணப்படுகின்றது.
இவ்வாறு குறித்த வீதி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதனால் மாந்தை கிழக்கின் பகுதிகளிலிருந்து வைத்திய தேவை நிமித்தம் பயணிக்க வேண்டுமாயின் 10 கிலோமீற்றர் தூரமுள்ள சுற்று பாதையினையே பயன்படுத்தவேண்டிய சூழல் காணப்படுவதாகவும்தெரிவித்திருந்தனர்

மாந்தை கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் வாழும் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் குறித்த வீதியை புனரமைத்து தருமாறும் உரிய அதிகாரிகள் இதில் கவனமெடுத்து குறித்து வீதியை புனரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.