கடலோர ரயில் போக்குவரத்தில் தாமதம்

118 0

மருதானையில் இருந்து பெலியத்த நோக்கிச் சென்று கொண்டிருந்த சாகரிகா கடுகதி ரயில் வாத்துவ-பிங்வத்த ரயில் பாதைக்கு இடையில் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் காரணமாக ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கடலோர ரயில் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.