11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !

259 0

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, பதுளை ,கொழும்பு , காலி , ஹம்பாந்தோட்டை ,களுத்துறை, கண்டி , கேகாலை  குருநாகல், மாத்தறை , மாத்தளை ,இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை (31) வெளியிடப்பட்ட  குறித்த அறிவிப்பு  இன்று  புதன்கிழமை (01) வரை அமுலில் உள்ளதாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .