இந்திய மீனவர்கள் 12 பேருக்கு கண் தொற்று

148 0

கடல் எல்லையை மீறி, சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 27 கடற்றொழிலாளர்களில் 12 பேர் கண் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக கடற்றொழில் சங்க உறுப்பினர்களை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிக நெரிசலான அறைகளில் வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு முதல் நாளிலிருந்து, சரியாக நித்திரை கொள்ள முடியவில்லை.

அவர்களில் பலருக்கு கால்களை நீட்டக்கூட முடியவில்லை என நீதிமன்றத்தில் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் பி.ஜேசுராஜா கூறியுள்ளார்.

இந்தநிலையில் சிறைப் பகுதிகளில் பரவிய கண் நோய்த்தொற்றால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.