கடும் அதிருப்தியால் மொட்டுக்குள் பிளவு

187 0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சுப் பதவிகளுக்கு முன்மொழியப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் கிடைக்காததாலும் ஜனாதிபதி தனிப்பட்ட தீர்மானங்களை எடுத்ததாலும் அரசாங்கத்திற்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் நெருக்கடி அதிகரித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, விமலவீர திஸாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சி.பி.ரத்நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கே அமைச்சு பதவிகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான கெஹலிய ரம்புக்வெலவின் அமைச்சர் பதவியை  தன்னிச்சையாக மாற்றியமையினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, அமைச்சர் பதவியை எதிர்பார்த்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த   சேர்ந்த பல சிரேஷ்டர்களும் பத்தரமுல்ல நெலும்மாவத்தை கட்சிக் காரியாலயத்திற்கு வருவதை நிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழுக்களாக பிளவு ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 2024 வரவு -செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்  செய்யவுள்ளதாக உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கும் அந்த வட்டாரங்கள் மேலும் சில புதிய முகங்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அமைச்சுப் பதவிகளை மாற்றுவதற்கான யோசனைகள் ஏற்கெனவே அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதன் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்களுக்கு அமைச்சு மற்றும் அரச அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பத்து பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அந்த கோரிக்கைக்கு வெற்றிகரமான பதில் கிடைக்காததால், மேலும் தயங்க வேண்டாம் என்று கட்சி முடிவு செய்தது.

மேலும்இ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தொடர்ந்து அநீதிகள் நடந்தால், வரவு செலவுத் திட்டத்திலோ அல்லது நெருக்கடியான காலகட்டத்திலோ உரிய பதிலடி கொடுப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தனர்.

இதேவேளைஇ சில அமைச்சர்கள் மற்றும் அமைச்சுச் செயலாளர்களின் செயற்பாடுகள் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் நாட்களில் அமைச்சுக்களின் பல செயலாளர்கள் மாற்றப்பட உள்ளனர்.

சுகாதார அமைச்சர் பதவி உட்பட மூன்று அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி அண்மையில் மாற்றினார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

நிதிஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.