பாணந்துறை நகருக்கு அருகிலுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் இன்று சனிக்கிழமை (28) காலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையமொன்றிலேயே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
பரவிய தீயை மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

