கொலை செய்ய திட்டமிட்ட ஐவர் கைது

152 0

டுபாயில் தலைமறைவாகியுள்ள ஹீனெடியன மஹேஸ் என்பவரின் ஆலோசனையின் பிரகாரம் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்ட ஐந்து பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பகுதியில் வைத்து குறித்த ஐவரும் கைதாகினர்.

கைதானவர்களிடம் இருந்து கைக்குண்டுகள், கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த துஷார என்ற வர்த்தகரையே குறித்த ஐவரும் கொலை செய்ய முற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.