தமிழீழ விடுதலைபுலிகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினர் – மத்திய அமைச்சர் மலிக் சமரவீர

402 0
தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையில்  இருந்தாலும் தமது விருந்தோம்பல் பண்பை சிறப்புடன் மேற்கொள்வார்கள் என தெரிவித்த மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை சார் அமைச்சர் மலின் சமரவிக்ரம, அவர்களுடன் இருந்த காலத்தில் தான் உணர்ந்தவற்றை நினைவு படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
2000 ஏற்றுமதியாளர்களை ஸ்தாபிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய ரீதியிலான முதலாவது விழிப்புணர்வு செயலமர்வு அண்மையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் புத்திசாலிகள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். கடந்த காலத்தில் எனது தந்தை யாழ் மாவட்ட பதில் அரச அதபராக கடமையாறிய போது விடுமுறை நாட்களில் இங்கு தங்குவோம். அனைத்து இடங்களுக்கும் சென்ற நினைவு உள்ளது.
தமிழ் மக்கள் சிறந்த விருந்துபசார பண்புள்ளவர்கள்   மிகவும் சந்தோசத்துடன் உபசரிப்பவர்கள். கடந்த 2002 இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த போது வடக்கில் கிளிநெச்சியில் உள்ள சமாதான செயலகத்துக்கு  வந்திருந்தேன். அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழச் செல்வனை சந்தித்தேன். எனக்கு சிறப்பான விருந்துபசாரம் இடம்பெற்றது. அதை  மறக்க முடியாது உங்களுக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
இக்கட்டான  சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் விருந்தோம்பல் பண்பை கைவிடமாட்டர்கள் என்பதை அறிந்துகொண்டேன் அதை நான் பாராட்ட விரும்புகிறேன். சமாதான செயலகத்துக்கு சென்ற போது ஒரு நாள் என்னை தங்கி செல்லுமாறு தமிழ்ச்செல்வன் கேட்டுக்கொண்டார். அப்போது தான் எனக்கு அறிந்து கொள்ளமுடிந்தது எத்தகைய துன்பகரமான சூழ்நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று, ஏனெனில் மிகவும்  கஸ்டமான இடமாக இருந்தது மின்சார வசதிகள் கூட அங்கு இருக்கவில்லை. அவ்வாறான இடத்திலேயே அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.பின்னர்   2009 ஆம் ஆண்டும் விஜயம் செய்தேன். தற்போது வருகை தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.