மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்-பரோனெஸ் ஜோய்ஸ்

237 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுறநலவாய அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் பரோனெஸ் ஜோய்ஸ்  இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மோதல் நிலைமைகள் தொடர்பாக ஆற்றப்படவேண்டிய விடயங்கள் எஞ்சியுள்ளதாக பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில், ஜெனிவா தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியதை பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் வரவேற்றுள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகளில் அரசாங்கம் இணைகிறது என்பதற்கு இது ஒரு சமிக்ஞையாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற காலவரையறையுடன் கூடிய விரிவான மூலோபாயத்தை உருவாக்க வேண்டும் என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.