இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால முன்னேற்றங்கள் குறித்து விளக்கம்

305 0

இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் பிரமுகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி பிரமுகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் இலங்கை குறித்து விளக்கமளித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம், காங்கிரஸ் கட்சியின் இரண்டு தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்து இங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர், காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள், அரசியல் நிலைவரங்கள், சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் பிரமுகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.