முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக நேற்று பதினெட்டாவது நாளாக தொடர்கின்றது.
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் தொடர்கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் கானாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தகவலறியும் உரிமை சட்டத்தினூடாக தங்களது பிள்ளைகள் தொடர்பான தகவலை பெற்றுக்கொள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து ஒட்டுமொத்தமாக 178 விண்ணப்பபடிவங்களை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செல்லையா பிரனவனாதனிடம் கையளித்து தங்களுடைய பிள்ளைகள் தொடர்பான தகவலை வழங்குமாறு கோரியுள்ளனர்
இந்தநிலையில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்ட பூர்த்தி செய்திருந்தனர் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உரிய திணைக்களங்களுக்கு இவற்றை அனுப்பி அதற்குரிய பதிலை தருவதாக உறுதியளித்துள்ளார்