 தம்புள்ளையில் கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
தம்புள்ளையில் கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொஸில் நிலையத்தில் பணியாற்றிய நிலையில், விடுமுறைக்காக தம்புள்ளைக்கு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் சகோதரரின் பிள்ளைகளுக்கு பொம்மைகள் வாங்குவதற்காக கடைக்கு சென்ற வேளையில், டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்துக்குள்ளானார்.
சம்பவ இடத்தில் பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள், தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு 25 வயது.
கான்ஸ்டபிள் மிகவும் விரும்பிய கரடி பொம்மையும் அவரது சடலத்திற்கு அருகிலேயே வைத்திருந்தது பெரும் எண்ணிக்கையிலான மக்களின் கண்ணீரை வரவழைத்த சம்பவம் என அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கரடி பொம்மையுடனும் பொலிஸ் மரியாதையுடனும் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெருந்திரளான பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணி வகுப்புக்கு மத்தியில் பூரண பொலிஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன.
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            