பலஸ்தீனத்தின் கமாஸ்-இஸ்ரேல் மோதலில் உட்கிடக்கையாக மறைந்திருக்கும், உலக ஒழுங்கின் புவிசார் நகர்வுகள்

243 0

ஒக்ரோபர் 7 இல், கமாஸின் அதிரடித் தாக்குதலோடு இந்த மோதல் தொடங்கியது.

இந்த தாக்குதலிற்கு பின்னே இருக்கும் புவிசார் நகர்வுகள் என ‘மேற்குலக ராஜதந்திர வட்டாரம்’ முன்வைப்பவை எவை?சவூதி அரேபியாவிற்கும்- இஸ்ரேலிற்கும் இடையே நடக்கவிருந்த ஒப்பந்தம்தான் இதற்கான விதை. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் தூண்டுதலோடு நடந்து கொண்டிருந்தது.இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட 3 தரப்புகளும் தங்களது நலனை அடிப்படையாக வைத்து நகர்வுகளை செய்து கொண்டிருந்தன.

ஒவ்வொரு தரப்பையும் வரிசையாக பார்ப்போம்.

• சவூதி அரேபியா

இந்த ஒப்பந்தம் பல பொருளாதார நலன்களை சவூதியிற்கு தருவதாக இருந்தது. அத்துடன் அதனது civilian nuclear program இற்கு அமெரிக்கா ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்பதும் இந்த ஒப்பந்தத்தில் ஒரு அங்கம்.இதற்கு பதிலாக இஸ்ரேல் எனும் இறையாண்மை அரசை அங்கீகரிக்க உடன்பட்டிருந்தது. சவூதி அதனது oil production ஐ அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட நாள் கோரிக்கைக்கு சவூதி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக West Bank இல் பாலஸ்தீனியர்களுக்கான அரசு அமைவதை இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும்.

இஸ்ரேலை பொறுத்தவரை மத்திய கிழக்கில் சவூதி அரேபியா ‘இஸ்ரேல் எனும் இறையாண்மை அரசை’ அங்கீகரிப்பது என்பது பெரும் வெற்றி. அது இஸ்ரேலின் உருவாக்கம், அதனது விரிவாக்கம் என்பதையெல்லாம் அங்கீகரிப்பதாகவே பொருள்படும். சவூதிக்கு பிறகு மத்திய கிழக்கில் மற்றைய இஸ்லாமிய நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அங்கீகரித்துவிடும்.
ஆனால் சவூதியின் civilian nuclear program இல் இஸ்ரேலிற்கு உடன்பாடு இல்லை.

அமெரிக்கா

மத்திய கிழக்கில் பலஸ்தீனப் பிரச்சினையை ‘ஏதோ ஒரு வழியாக’ அமைதிப்படுத்துவது நீண்டகால அடிப்படையில் அமெரிக்காவிற்கு சாதகமானது. ‘ஏதோ ஒரு வழியாக’ என்பது பாலஸ்தீனியர்களுக்கு நீதியான தீர்வு என்ற பொருளில் அல்ல.

மேலே கூறிய சவூதி-இஸ்ரேல் ஒப்பந்தம் மத்திய கிழக்கில் இருக்கும் வேறொரு இரண்டு தரப்பின் நலன்களுக்கு முரணாக அமைகிறது.

யார் அந்த இரண்டு தரப்பு?

கமாஸ்
ஈரான்

௧மாஸின் நலனுக்கு எப்படி முரணாக அமைகிறது?

இதற்கு இன்றைய பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

அன்றைய திகதியில் பிரிட்டிசாரின் ஆளுகைக்குள் இருந்த அந்த Mandatory Palestine இன் நிலப்பரப்பு அளவு 25585 சதுர கிமீ.

1947 இல், United Nations Resolution 181 படி, பாலஸ்தீனம் இரண்டு அரசுகளாக பிரிக்கப்பட்டது. ஒரு பகுதி யூத மக்களுக்காகவும், மற்றைய பகுதி பாலஸ்தீனர்களுக்காகவும் பிரிக்கப்பட்டது.

United Nations Resolution 181, resolution passed by the United Nations (UN) General Assembly in 1947 that called for the Partition Of Palestine into Arab and Jewish states, with the city of Jerusalem as a corpus separatum (Latin: “separate entity”) to be governed by a special international regime.

அன்றைய மக்கள் தொகையில் 33% இருந்த யூத மக்களுக்கு (இந்த யூத மக்களும் British Empire இன் திட்டத்தின் படி 1920-1948 காலப்பகுதியில் உலகின் பிறபகுதியில் இருந்து குடியேற்றப்பட்டவர்கள்), 55% நிலப்பகுதி ஒதுக்கப்பட்டது.

மூன்றில் இரண்டு பகுதி இருந்த பாலஸ்தீனியர்களுக்கு 42% நிலப்பகுதியே ஒதுக்கப்பட்டது. (படம் கீழே)

அதாவது Mandatory Palestine இனது மொத்த நிலப்பரப்பான 25585 சதுர கிமீ இல், 55% நிலப்பரப்பு 1/3 பங்கிருந்த யூத மக்களுக்கு கொடுக்கப்பட்டது.

2/3 இருந்த பாலஸ்தீன மக்களுக்கு 42% நிலப்பரப்பு கொடுக்கப்பட்டது.

மீதி 3% ஜெருசேலம், ஐக்கிய நாடுகள் அவையின் பார்வையில் வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை போர்கள், ஆக்கிரமிப்பு என பலவும் நடந்து இன்று பாலஸ்தீனியர்களுக்கு மிஞ்சியிருப்பது West Bank உம், Gaza Stripe உம் மட்டுமே.

இன்றைய West Bank இனது அளவு 5655 சதுர கிலோமீற்றர் .

இன்றைய Gaza Stripe இன் அளவு 365 சதுர கிலோமீற்றர் .

சரி. இந்த இரண்டு நிலப்பரப்பாவது பாலஸ்தீனியர்களுக்கு மிஞ்சியிருக்கிறதா?

அதுதான் இல்லை.

1993 இல் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில், இஸ்ரேலுக்கும் யாசீர் அரபாத் தலைமையிலான Palestine Liberation Organization (PLO) இற்கும் இடையில் Oslo Accords ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி West Bank இன் நிலப்பகுதி 3 வலயங்களாக பிரிக்கப்பட்டன. (படம் கீழே)

• Area A
• Area B
• Area C

Area A – இது West Bank இன் மொத்த நிலப்பரப்பில் 18% இனை உடையது.
இது பாலஸ்தீனியர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் (under Palestinian control).

Area B – இது West Bank இன் மொத்த நிலப்பரப்பில் 22% இனை உடையது. இது பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் என இருவரின் கட்டுப்பாட்டிலும் வரும் ( under joint Israeli -Palestinian control)

Area C – இது West Bank இன் மொத்த நிலப்பரப்பில் 60% இனை உடையது. இன்றுவரை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது (Under Israeli control ).

இந்த 60% நிலப்பரப்பு காலப்போக்கில் பாலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவேண்டும். ஆனால் இன்றுவரை அது வழங்கப்படவில்லை. இந்த Area C இல் தான் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக யூத மக்களை குடியேற்றுகிறது.

Area C was defined as “areas of the West Bank outside Areas A and B, which, except for the issues that will be negotiated in the permanent status negotiations, will be gradually transferred to Palestinian jurisdiction in accordance with this Agreement.”

கீழேயுள்ள படத்தில் Area A, Area B இனை அவதானியுங்கள். பாலஸ்தீனியர்களின் நிலப்பரப்பு பொட்டு பொட்டாக சிதறி இருக்கும். நிலப்பரப்பில் தொடர்ச்சி இருக்காது (non contiguous territory).

ஆனால் Area C தொடர்ச்சியான நிலப்பகுதியாக இருக்கும் (contiguous territory).

ஆக ஏற்கனவே 1947 இன் United Nations Resolution 181 படி, பாலஸ்தீனத்தின் 25585 சதுர கிமீ இல் கிடைத்தது 42% நிலப்பரப்புதான்.

பின் பல போர்கள், ஆக்கிரமிப்பிற்கு பின்பு இருந்தது மிஞ்சியது West Bank இன் 5655 சதுர கிமீ உம், Gaza Stripe இன் அளவு 365 சதுர கிமீ உம் மட்டும்தான்.

அந்த West Bank இன் 5655 சதுர கிமீ நிலப்பரப்பிலும், 60% இனை இஸ்ரேல் எடுத்து கொண்டுவிட்டது.

மீதி இருப்பவைதான் இன்று பாலஸ்தீனியர்களுக்கு.

• சரி. இனி பதிவின் மையப்புள்ளிக்கு திரும்புவோம்.

இந்த Oslo Accords இன் படி, West Bank இற்கும் Gaza Strip இற்கும் Palestinian Legislative Council எனும் சட்டமியற்றும் நிறுவனம், அரசு இயந்திரம்
உண்டு. இதற்கான பிரதிநிதிகள் பாலஸ்தீனிய மக்களால் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.

கடைசியாக 2006 Palestinian legislative election இல் ஹமாஸ் இயக்கம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. மீதி இடங்களில் PLO இன் FATAH அமைப்பு வென்றது.

ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றதால், அது தீவிரவாத இயக்கம் என்று ‘ஒரு காரணத்தை கூறி’ பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் பொருளாதார முற்றுகையை இன்றுவரை விதித்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி, West Bank நிலப்பரப்பு Palestinian Authority என்ற அரசு இயந்திரத்தின் ஆளுகைக்குள் வருகிறது. இது முழுக்க முழுக்க FATAH அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

Gaza Strip முழுமையாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

ஆக பாலஸ்தீனிய மக்களின் ‘வரலாற்று தாயக நிலப்பரப்பினை’ மீட்டெடுக்க தாமே உண்மையான பிரதிநிதி என்ற போட்டி ஹமாஸ் இயக்கத்திற்கும் FATAH அமைப்பிற்கும் நிலவுகிறது.

இந்த இரு அமைப்பிற்கும் இடையில் நடந்த சண்டை Battle of Gaza (2007) என அழைக்கப்படுகிறது. நடந்த காலப்பகுதி ஜூன் 10- 15, 2007.

இதில் West Bank நிலப்பரப்பினை ஆளுகை செய்யும் Palestinian Authority (PA) இல் ஊழல் மலிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த PA அரசு இயந்திரம் FATAH இன் கட்டுப்பாட்டில் இருப்பதாகும்.

அதேவேளையில் West Bank இல் ஹமாஸினை அழிப்பதற்கு, இந்த Palestinian Authority இஸ்ரேலிய படைகளுக்கு (Israel Defense Forces – IDF) மறைமுகமாக உதவி புரிந்து வருகின்றது.

“The PA is caught in a political trap, wanting to see Hamas fail but unable to openly cheer for Israel.

The PA claims to represent all Palestinians, a stance that is incompatible with Hamas’s independent power in Gaza.

Abbas and other PA leaders have implicitly supported the isolation of Gaza, and its security forces have worked closely with Israel to crush Hamas in the West Bank, often acting brutally in the process.”

(Foreign Policy இல் வெளியான ‘What You Need to Know About the Israel-Hamas War’ கட்டுரையிலிருந்து)

• இனி நாங்கள் மேலே சொன்ன சவூதி-இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு வருவோம்.

அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக West Bank இல் பாலஸ்தீனியர்களுக்கான அரசு அமைவதை இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சவூதி கோருகிறது.

இது நடக்குமாயின் West Bank நிலப்பரப்பினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் Palestinian Authority இற்கு பாலஸ்தீன மக்களின் ஏகப் பிரதிநிதி என்ற அங்கீகாரம் கிடைத்துவிடும்.

இது ஹமாஸின் அரசியல் இலக்கை பின்னுக்கு தள்ளிவிடும். இயக்கத்தையும் தனிமைப்படுத்தும்.

அதனால் இந்த சவூதி-இஸ்ரேல் ஒப்பந்தத்தை குறுகிய காலத்திற்காவது நிறுத்தி வைக்க ஹமாஸ் முயலுகிறது.

அக்டோபர் 7 இல் ஹமாஸ் நடத்திய இந்த பெரும் தாக்குதலிற்கு பதிலடியாக இஸ்ரேல் பாரிய பதிலடியை தரும் என்பது ஹமாஸிற்கு தெரியும்.

Gaza Strip இல் அதிகளவான பாலஸ்தீனிய மக்கள் இஸ்ரேலினால் கொல்லப்படுவது சவூதியிற்கு சிக்கலை உருவாக்கும். பெருமளவு பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்படும்போது, இஸ்ரேலை அங்கீகரிக்கிறேன் என சவூதியால் சொல்லமுடியாத நிலை உருவாகும். இதனூடாக ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாகவாவது நிறுத்த முயல்கிறது.

• அடுத்தது ஈரான்

மத்திய கிழக்கில் ஒரு regional power ஆக வருவதற்கான நகர்வுகளை பல ஆண்டு காலமாகவே ஈரான் செய்து வருகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலினுடைய military superiority ஐ உடைக்கும் விதமாகத்தான், ஈரான் அணு ஆயுதத்தை அடையவும் முயல்கிறது.

தனது nuclear program இற்கு பெரும் தடையினை பிரயோகித்துவரும் இஸ்ரேலிற்கு, மத்திய கிழக்கில் ஒரு legitimate sovereign state என்ற அந்தஸ்து பிற இஸ்லாமிய நாடுகளால் கிடைப்பது ஈரானின் நகர்வுகளை பலவீனமாக்கும்.

ஈரான் தனது military doctrine படி மத்திய கிழக்கில் சிரியா, லெபனான், ஈராக், யேமன் என்பவற்றை அதனது செல்வாக்கிற்கு (sphere of influence) உட்பட்ட நாடுகளாக மாற்றியிருக்கிறது. அங்கே தனக்கான proxy military group களையும் உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்த சவூதி-இஸ்ரேல் ஒப்பந்தத்தை மனதில் வைத்து, ஒரு மாதத்திற்கு முன்னர் ஈரான் ஜனாதிபதி Ebrahim Raisi கூறிய ஒரு விடயம் இதனோடு தொடர்புடையது.

Iranian President Ebrahim Raisi said, “We are against any bilateral relations between our regional countries and the Zionist regime,” a reference to Israel.

Raisi added, “We believe that the Zionist regime is intending to normalize this bilateral relations with the regional countries to create security for itself in the region.”

“மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் Zionist இஸ்ரேலுடன் ராஜதந்திரரீதியில் தொடர்புகளை மேற்கொள்வதை நாம் எதிர்க்கிறோம்.

இவ்வாறான இரு தரப்பு உறவுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்துவதன் மூலம், Zionist இஸ்ரேல் தனக்கு உகந்த ஒரு அரசியல் புறச்சூழலை மத்திய கிழக்கில் உருவாக்க முயல்கிறது” என ஈரானிய அதிபர் Ebrahim Raisi குறிப்பிட்டிருந்தார்.

• ஆக ஈரான் இந்த சவூதி-இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு எதிர் நிலையில் இருப்பது தெளிவு. தனக்கு சவாலாக இருக்கும் இஸ்ரேலிற்கு உகந்த அரசியல் புறச்சூழல் உருவாவதை ஈரான் அனுமதிக்க முடியாது.

அதே போன்று தனது அரசியல் இலக்கை பலவீனப்படுத்தும், தன்னை தனிமைப்படுத்தும் சவூதி-இஸ்ரேல் ஒப்பந்தத்த்தை ஹமாஸும் விரும்பவில்லை.

கமாஸிற்கு இராணுவரீதியில் ஆதரவை வழங்குவது ஈரான்தான்.
இந்த இரு தரப்பின் நலன்களும் ஒரு புள்ளியில் இணைகின்றன.

மறுதரப்பில் இஸ்ரேல், சவூதி அரேபியா, அமெரிக்கா தமது தமது நலன்களை கருத்தில்கொண்டு நகர்வுகளை செய்கின்றன.

ஆக இந்த ஐந்து தரப்பினது புவிசார் நலன்கள்தான் இந்த Hamas-Israel War இற்கு பின்னிருந்து இயக்கும் சக்திகளாகும். பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் இடையிலிருந்த தொடர்பாடலும் புரிந்துணர்வும், தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சிந்தனையிலும், செயற்பாட்டிலும் கட்டமைக்கப்பட்டது. ஆனால் யாசீர் அரபாத்தின் மறைவிற்குப் பிறகு (முன்னரே உருவாக்கப்பட்டது) எழுச்சிபெற்ற கமாஸ் இயக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் இடையில் இருந்த புரிந்துணர்வுகள், தொடர்பாடல்கள் ஒத்துப் போகும் தன்மைகள் எத்தகையது என்பதே இன்றைய கேள்வி? எது எவ்வாறாயினும் அமெரிக்காவின் மத்தியகிழக்கு சண்டியனான இஸ்ரேல், பலஸ்தீனத்தின் மீது எவ்வாறான போரியல் நகர்வுகளை மேற்கொண்டதோ , அத்தகைய நகர்வுகளே மொசாட் ஊடாக சிறிலங்காவிற்கு கற்பிக்கப் பட்டு நடைமுறைத்தப் பட்டு வருகிறது . ஆக மொத்தத்தில் இன்றைய தமிழீழத்தின் நெருக்கடியான சூழமைவின் பிரதான மூளையாக செயற்பட்டது, இஸ்ரேலிய புலனாய்வு கட்டமைப்பான மொசாட் ஆகும். எனவே எமக்கு அருகில் இஸ்ரேலா பலஸ்தீனத்தின் கமாசா? காலம் பதில் சொல்லும் எனக் காத்திருக்காமல் பிரபாகரன் சிந்தனை தமிழினத்திற்கு வழிகாட்டும்……