மக்களின் வேதனைகளை அறிந்து அதற்கு ஏற்றது போல நாம் பணிபுரி்யவேண்டும் – வடமாகாண ஆளுநர்

232 0
நாம் இங்கு பணியாற்ற வந்தது இப் பகுதி மக்கள் சோதனையிலும் வேதனையிலும் வாடுவதனால் அவர்களை அதில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே அன்றி அவர்களின் வேதனையை மட்டும் அரசியல் பேசாது அதற்கு செயல் வடிவம் கொடுத்து என்ன செய்யலாம் என ஆராய்ந்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார்.
இலங்கையில் 2 ஆயிரம் ஏற்றுமதியாளர்களை ஸ்தாபிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்ட ஆரம்பம் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் மூலோபாய  ஏற்றுமதி முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் தலைவி இந்திரா மல்வத்த தலமையில் இடம்பெற்றது.
இதில் மூலோபாய  ஏற்றுமதி முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர்  மலிக் சமரவீர வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே , வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , இராஜாங க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் , சுஜீவ சேனசிங்க , நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் உள்ளிட்டோருடன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் புதிய ஏற்றுமதி ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது வட மாகாண ஆளுநர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு ஆளுநர் தொடர்ந்தும் இது தொடர்பில் உரையாற்றுகையில் ,
நாம் வடக்கு கிழக்கில்  பணியாற்ற வந்தது இப் பகுதி மக்கள் சோதனையான  வேதனை நிறைந்து துன்பத்தில் வாடுவதனால் அம்மக்களை அதில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே அன்றி அவர்களின் வேதனையை மட்டும் அரசியல் பேசாது அதற்கு செயல் வடிவம் கொடுத்து என்ன செய்யலாம் என ஆராய்ந்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும். அரசியல் பேசுவது ஒரு காலம் அதன் படி செயல்படுபது ஒரு காலம் தேர்தல் காலத்தில் அரசியல் பேசுவோம். அதன் பின்பு அதன்படி அதற்கு செயல்வடிவம் கொடுப்போம்.
அவ்வாறு இன்றி தினமும் அந்த அரசியலை மட்டும் பேசுவதால் பயணில்லை. வடக்கில் உள்ள பிரச்சணை எல்லாம் இன்று எல்லோருக்கும் தெரியும். அந்த பிரச்சணையை மட்டும் பேசாது என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும். இன்று வெளிநாட்டில் உள்ளவற்றினைப் பற்றிப் பேசுகின்றோம் இந்த யாழ். குடாநாட்டில் போதிய உப்பு உற்பத்தியினைப் பெற்றுக் கொள்ள முடியும் ஆனால் இன்றும் இந்த யாழ்ப்பாணத்திற்கு உப்பு வெளியில் இருந்துதான் வருகின்றது. இதனை ஏன் இங்கு உற்பத்தி செய்ய முடியாது.
எனவே இங்கே அபிவிருத்திக்கு மத்தியும் மாநிலமும் இணைந்து என்ன பணியாற்றலாம் என்பதனையே பார்க்க வேண்டும். என்றார்