மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்…(காணொளி)

303 0

மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.சகஸ்ர ஞாமம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

கனடா மார்க்கம் தமிழ் சமூகம் பங்களிப்புடன் உதவும் கரங்கள் அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ.சுகுமாரன், உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர் எம்.செந்தில்நாதன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.