பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும்…(காணொளி)

251 0

பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பமானது.

ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் நடாத்தப்படும் விவசாயிகள் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பங்குகொள்ளும் பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும் நேற்று காலை 9.30மணிக்கு கல்லடி பாலம் அருகில் உள்ள பாலம் சந்தையில் ஆரம்பமாகியது.

ஆரம்ப நிகழ்வு ஒக்ஸ்பாம் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் செல்லப்பா கணேசராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் முகாமையாளர் கே.குகதாசன், நெஷாட் அமைப்பின் இணைப்பாளர் செல்லத்துறை இரமேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் இலங்கை சமூக நிறுவனத்தால் வடகிழக்கு சமூக பொருளாதார அபிவிருத்தியாளர் பங்களிப்புடன் இந்த கண்காட்சியும் மாநாடும் ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்டத்தில் ஓக்ஸ்பாம் திட்டங்கள் மூலம் அனுசரணை வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கும் தங்களது அனுபவங்களையும் சிறந்த தொழில் முறைகளையும் ஏனைய சேவை வழங்குகின்ற பங்குதாரர்களுடனும் அதனுடன் தொடர்புகொண்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடனும் பகிர்ந்துகொள்வதற்கான தளத்தினையும் தொடர்புகளையும் உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தினை .தன் மூலம் வழங்கும் வகையில் .ந்த கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்படுகிறது.

இந்த நிகழ்வானது மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், தொழிலதிபர்கள், சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள், இதனுடன் தொடர்புகொண்ட அதிகாரிகள், தொழில் ஆரம்பிக்கவுள்ளவர்கள், இதனுடன் தொடர்புபட்ட அரச, தனியார் துறையை சேர்ந்தவர்கள், ஆய்வுகள் மேற்கொள்பவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு சிறந்த நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு உற்பத்திகள் கொண்ட காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஆலோசனை சேவைகளும் வழங்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பெண்கள் சக்தி திட்டத்தின் மூலம் உள்வாங்கப்பட்டு வாழ்வாதார நிலையினை மேம்படுத்தியுள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் கண்காட்சி கூடங்களும் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியினை இன்று மாலை 7.30மணி வரையில் பார்வையிடமுடியும் என ஏறபாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.