ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

257 0

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கைக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கக்கூடாது என்று தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

2015ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் மனித உரிமைப் பேரவையில் தீர்மானிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்துக்ளு கால அவகாசம் வழங்கப்பட்டது.

எனினும் கால அவகாசம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 18 மாத காலப்பகுதிக்குள் பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் மேற்;கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும், அவ்வாறு கால அவகாசம் வழங்குமிடத்து தமிழ் மக்களின் பிரச்சனைகள், யுத்த மீறல்கள் என்பனவற்றை இல்லாமல்போக செய்வதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ளும் எனவும் கூறினார்கள்.

எனவே, எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக் கூடாது என்று தெரிவித்தே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்ச்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றுடன் 27 நாட்களாக நீதியை எதிர்பார்த்து போராடிக்கொண்டிருக்கிறனர்.