துப்பாக்கிகள் உரிமங்களை புதுப்பித்தல் வேலைத்திட்டம் அக்டோபர் முதல்

143 0

2024 ஆம் ஆண்டுக்கான தனிநபர்கள் மற்றும்  நிறுவனங்களின் துப்பாக்கி ஆயுத உரிமங்களை புதுப்பித்தல் திட்டம் எதிர்வரும் அக்டோபர் 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 31  ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

துப்பாக்கிகள் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வைத்திருப்பது துப்பாக்கிச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

சரியான கால அவகாசத்திற்கு பின்னர் கையளிக்கப்படும் புதுப்பித்தல்களுக்கு அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பு அமைச்சின்  www.defence.lk  என்ற இணையத்தளத்தின் மூலம் விபரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.