மூன்று ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

211 0

பலத்த மழை காரணமாக மூன்று ஆறுகள் பெருக்கெடுக்கும் மட்டத்தை அடைந்துள்ளன என  நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வலா கங்கை, குடா ஓயா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவை அவதான மட்டத்தை அடைந்துள்ளன என  திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.