அரிய வகை மீன்பிடிப் பூனையொன்று வாகனத்தில் மோதி உயிரிழப்பு

51 0

புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியில் அரிய வகை மீன்பிடிப் பூனையொன்று நேற்று திங்கட்கிழமை (18) இரவு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மீன்பிடிப் பூனை கலப்பிலிருந்து பிரதேசத்தை நோக்கி வீதியைக் கடக்க முற்பட்டபோது வாகனத்தில் மோதூண்டு உயிரிழந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

 

அத்துடன், கலப்பு காணப்படுவதால் அதிகளவிலான மீன்பிடிப் பூனைகள் மீன்களை சாப்பிடுவதற்கு கரையோரங்களில் சஞ்சரிப்பதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் குறித்த பகுதியில் இவ்வாறு வீதியைக் கடக்கும்போது வாகனங்களில் மோதூண்டு உயிரிழந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த மீன்பிடிப் பூனை சுமார் 3 அடி நீளமுடையது என மதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.