அமெரிக்காவில் சோகம் – விமான சாகசத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 2 விமானிகள் பலி

112 0

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இதன் இறுதிப்போட்டியில் விமானங்கள் கலந்து கொண்டன. அப்போது தரை இறங்கும்போது 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இதில் அந்த விமானங்கள் நொறுங்கின. இந்த விபத்தில் அதில் பயணித்த 2 விமானிகள் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று 2 விமானிகளின் உடல்களை மீட்டனர்.

இறந்தவர்கள் பெயர் விவரங்கள், விபத்துக்கான காரணம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.