மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு

229 0

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தொடர்பான 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

அதற்கு அமைய, டென்மார்க்கை பின்தள்ளி நோவே முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு மக்களின் சேமநலன்கள் மற்றும் சமத்துவம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

டென்மாக், ஐஸ்லாந்து, சுவிஸ்சலாந்து, பின்லாந்து, நெதலாந்து, கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன.

தென் சூடான், லைபீரியா. கினியா, டோகோ மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் மகிழ்ச்சியற்ற நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

155 நாடுகளைக் கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு 120 ஆவது இடம் கிடைத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு 132 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, கடந்த வருடம் வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சியான பட்டியலில் 117வது இடத்தில் காணப்பட்டது.

இதன்படி, இந்த வருடத்தில் இலங்கை மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது