நெதர்லாந்தில் அல்மேரா தமிழ்ப்பள்ளியில் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

179 0

நெதர்லாந்தில் அல்மேரா தமிழ்ப்பள்ளியில் தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு 17-09-2023 ஞாயிறு மிகவும் உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்டது.
பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்பநிகழ்வுகளைத் தொடர்ந்து நினைவுக் கவிதைகள் நினைவுரை என்பனவும் இடம்பெற்றன.
தாயகத்தில் சிங்கள அராஜகவாதிகளால் தியாக தீபத்தின் நினைவு நிகழ்விற்கு இடையூறுகள் இடம்பெற்ற போதும் நெதர்லாந்து மண்ணில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட இந் நிகழ்வானது தியாகதீபத்தின் அகிம்சைப்போராட்டத்திற்கு உலகத் தமிழர்கள் என்றும் குரல்கொடுப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட இந் நிகழ்வு எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.