தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி வவுனியாவை சென்றடைவு

179 0

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி இன்று அதிகாலை வவுனியாவை சென்றடைந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் பொத்துவிலில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமானது.

பொத்துவில்லில் ஆரம்பிக்கப்பட்ட பவனியானது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் அனைத்து மாவட்டங்கள் ஊடாகவும் பயணித்து இறுதியில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபி வரை சென்று நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் திருகோணமலையில் ஊர்தி சென்ற போது காடையர்கள் சிலரால் ஊர்தி மீதும், கஜேந்திரன் எம்.பி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஊர்தியானது இன்று அதிகாலை வவுனியாவை சென்றடைந்தது.

ஊர்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்டவர்கள் வவுனியாவை சென்றடைந்தனர்.