நிறைவேற்று அதிகாரத்தாலேயே யுத்தத்துக்கு முடிவு கட்டப்பட்டதாம்! – ஜே.ஆரின் மூத்த பேரன் சொல்கின்றார்

73 0
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன  தெரிவித்தார்.

இம்மாதம் (17) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜன்ம தினம்  நினைவு கூரப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.

இன்று நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தினால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் துணிச்சலான தீர்மானங்களை நாம் பாராட்டுகின்றோம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு நாம் பூரண ஆதரவளிக்கிறோம்.  எனவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அனைவரும்  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை மற்றும் ஆய்வுக் குழுவின் தலைவர் கருணாசேன கொடித்துவக்கு, ஜே.ஆர்.ஜயவர்தனவின்  பேரன்களான ஏ.ருக்சான் ஜயவர்தன,  அம்ரிக் ஜயவர்தன, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்.ஏ.பி. தயாரத்ன, ஜே.ஆர். ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினர் சிரேஷ்ட பேராசிரியர் யு. ஜி.  புஸ்வேவல மற்றும் ஜே. ஆர். ஜயவர்தன நிலைய உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.