நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை ஜே.ஆர். முன்வைத்தார்

51 0
நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை ஜே.ஆர். ஜயவர்தன முன்வைத்தார்.  அரச நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் கொண்டிருந்தார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இம்மாதம் (17) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜன்ம தினம்  நினைவு கூறப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே  முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி சார்பற்ற நபராக இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை ஜே.ஆர். ஜயவர்தன முன்வைத்தார்.  அரச நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் கொண்டிருந்தார்.

இதன் மூலம், நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதே அவரது நோக்கமாக இருந்தது. இந்தக் கூட்டு முயற்சிகளால்தான் இன்று சீனா பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது.

ஜே.ஆர்.ஜயவர்தன ஒரு முடிவை எடுத்தால், அந்த முடிவை  மாற்றமாட்டார். அதை மாற்றினால், அது மக்கள் நல ஆட்சியை உருவாக்க மட்டுமே செய்யப்பட்டது.

அவருடைய ஆட்சியின் போது அவருடன் ஒரு நல்ல இளைஞர் கூட்டம் இருந்தது. இளைஞர்களுக்கு வாய்ப்பையும் அதிகாரத்தையும் கொடுத்தார்.

தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு ஜே.ஆர். ஜயவர்த்தன  ஒரு சிறந்த முன்மாதிரி என்றார்.