இதனையா இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் என தெரிவிக்கின்றது

127 0
image
திருகோணமலையில் தியாகி திலீபனின் ஊர்தி தாக்கப்பட்டமையும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தாக்கப்பட்டமையும் இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலிற்கான மற்றுமொரு உதாரணம் என மனித உரிமை சட்டத்தரணி பவானிபொன்சேகா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இதனையா நல்லிணக்கம் என தெரிவிக்கின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவுடான சந்திப்பின்போது ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகமும் ஏனையவர்களும் இது குறித்தும் வன்முறையை தெளிவாக தூண்டும் ஏனைய விடயங்கள் குறித்தும்; கேள்வி எழுப்புவார்களா என டுவிட்டரில் பதிவிட்டுள்ள பவானி பொன்சேகா இலங்கையில் ஆழமாக வேருன்றியுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு பொருளாதார மீட்சி மாத்திரம் போதுமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.