17 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் பெண் கைது

22 0
சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து வந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதான குறித்த பெண் அடிக்கடி விமானம் மூலம் பொருட்களை கொண்டுவந்து இலங்கையில் விற்பனை செய்து வருபவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

17 ஆயிரம் சிகரெட்டுக்கள் அடங்கிய 85 காட்டுன்கள் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.