லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலையிலி பாட ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கோரி ஆர்ப்பாட்டம்(காணொளி)

276 0

நுவரெலியா லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலை தமிழ் பாட ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கோரி, பெற்றோர் மற்றும் மாணவர்களால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலையில் தரம் 1 முதல் 11 வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகளும், மாணவர்களின் பெற்றோர்களும் பாடசாலை முன்றலில் இன்று காலை 3 மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராடுவோம் போராடுவோம் எங்கள் ஆசிரியர் எங்களது பாடசாலையிலேயே இருக்க அனுமதி கொடுக்கும் வரை போராடுவோம்,

7 வருடங்களாக எங்களுக்கு கற்பித்த ஆசிரியரை வெளிப்பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்,

தரம் 11 வகுப்பாசிரியரை வேறொரு பாடசாலைக்கு இடமாற்றம் செய்தால் பெற்றோர்களாகிய எங்களது நடவடிக்கை கடுமையானது

என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

குறித்த ஆசிரியரை இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் எனவும், இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களும், மாணவர்களும் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று காலை பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.