உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (15) திகதி நிர்ணயித்துள்ளது.
இதன்படி இந்த மனுக்கள் நவம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
புவனேக அலுவிஹாரே தலைமையிலான 6 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பாக இது தொடர்பான ஆவணங்கள் இன்று வெள்ளிக்கிழமை (15) அழைக்கப்பட்டன.
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பலர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

