முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி(காணொளி)

250 0

 

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின் நலன் கருதி, 30 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட விடுதி, நேற்று மாணவிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் விமல் ஜயரட்ணத்தின் நிதி பங்களிப்பில், கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிதியத்தினரால், குறித்த விடுதி அமைக்கப்பட்டு மாணவிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கற்றல் கூடம், சமையல் அறை, விருந்தினர் அறை, நவீன வசதிகளுடனான குளியலறை, மற்றும் தங்கும் அறைகள் என பல வசதிகளுடன் இவ்விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் சுமாh அறுபது மாணவர்கள் தங்கியிருந்து கற்க கூடிய வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.