 இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சித்தங்கேணி வடக்கங்கரை அம்பாள் விளையாட்டுகழகத்தினால் நேற்றையதினம் நடாத்தப்பட்ட இறுதி சுற்று கிரிக்கெற் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.
எமது இளைஞர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு கழகங்களிடம் போதிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர், கழகங்களை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
வடக்கங்கரை அம்பாள் விளையாட்டு கழக இளைஞர்களின் இறுதிச்சுற்று கிரிக்கெற் போட்டியானது, விருந்தினர்கள் மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற அணிக்கான வெற்றிக்கிண்ணம் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            