சென்னை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கடத்தல் காரர்கள் வந்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை ஓமனில் இருந்து வந்த விமானத்தை சோதனை செய்தனர்.
மேலும், பயணிகள் ஒவ்வொருவரையும் சோதனை செய்தனர். அப்போது, விமானத்தில் பயணித்த 156 பேரில், 149 பேர் கடத்தல் காரர்கள் என்ற எதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மொத்தம் 156 பேரில் 7 பேர் மட்டுமே ஒரே குடும்பத்தை சேர்ந்த பயணிகள். மற்ற அனைவரும் கடத்தல் கும்பல் என தெரியவந்துள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 149 பேரிடம் இருந்து ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு விமானத்தையே கடத்தல் கும்பல் புக் செய்துள்ளது.
மேலும், சோதனையில் 13 கிலோ தங்கம், 2500க்கும் மேற்பட்ட செல்போன்கள், குங்குமப்பூ உள்ளிட்டவற்றை கும்பல் கடத்தி வந்துள்ளன. சிக்கிய கடத்தல் கும்பல் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள். கடத்தலின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

